எல்லைக் கட்டுப்பாடுகளை மீண்டும் நீட்டிக்க முடிவு செய்துள்ள ஜேர்மனி
செக் குடியரசு, போலந்து மற்றும் சுவிட்சர்லாந்துடனான எல்லைக் கட்டுப்பாடுகளை டிசம்பர் நடுப்பகுதி வரை நீட்டிக்க ஜேர்மனி முடிவு செய்துள்ளது.
எல்லைக் கட்டுப்பாடுகளை அறிவித்த ஜேர்மனி
அக்டோபர் மாதத்தின் மத்தியில், சுவிட்சர்லாந்து, போலந்து மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளுடனான எல்லைகளில் கட்டுப்பாடுகளை விதிப்பதாக ஜேர்மனி அறிவித்திருந்தது.
Reuters
முதலில், 10 நாட்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர், அக்டோபர் மாத இறுதிவரை 20 நாட்களுக்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டன.
கட்டுப்பாடுகள் இரண்டாவது முறையாக நீட்டிப்பு
பின்னர், நவம்பரில் எல்லைக் கட்டுப்பாடுகள் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஜேர்மனி அறிவித்தது. நவம்பர் மாதம் 13ஆம் திகதி, ஜேர்மனி வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஒழுங்கற்ற புலம்பெயர்தலையும், ஆட்கடத்தலையும் கட்டுப்படுத்துவதற்காக, எல்லைக்கட்டுப்பாடுகளை ஜேர்மனி பயன்படுத்திக்கொள்ள விரும்புவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
© Ilona Lablaika | Dreamstime.com
கட்டுப்பாடுகள் மீண்டும் நீட்டிப்பு
இந்நிலையில், இம்மாதம், அதாவது, டிசம்பர் 15ஆம் திகதி வரை மீண்டும் செக் குடியரசு, போலந்து மற்றும் சுவிட்சர்லாந்துடனான எல்லைக் கட்டுப்பாடுகளை நீட்டிப்பது என ஜேர்மனி முடிவு செய்துள்ளதாக பெடரல் உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் தற்போது அறிவித்துள்ளார்.