ஜேர்மன் விமான நிலையங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை: பணியமர்த்தப்படும் வெளிநாட்டு ஊழியர்கள்
ஜேர்மன் விமான நிலையங்களில் பணியாளர்கள் பற்றாக்குறையை போக்க தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களை ஜேர்மனி பணியமர்த்தவுள்ளது.
ஜேர்மன் விமான நிலையங்களில் பணியாளர்கள் பற்றாக்குறையை நிரப்புவதற்கு தற்காலிக தீர்வாக வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நுழைவை ஜேர்மனி அனுமதிக்கும் என்று உள்துறை, போக்குவரத்து மற்றும் தொழிலாளர் அமைச்சகங்கள் தெரிவித்துள்ளது.
ஜேர்மனி உட்பட ஐரோப்பா முழுவதும் உள்ள விமான நிலைய ஆபரேட்டர்கள், பெரும்பாலான COVID-19 கட்டுப்பாடுகளின் முடிவில் பயணத்திற்கான தேவை மீண்டும் அதிகரித்துள்ளதால், பயணிகளின் ஓட்டத்தைக் கையாள பணியாளர் பற்றாக்குறையுடன் போராடி வருகின்றனர்.
இந்த வார தொடக்கத்தில் டூசெல்டார்ஃப் (Duesseldorf) விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைச் சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பயணிகளின் புகைப்படங்கள் வெளியாகின. விடுமுறைக் காலத்தில் பெய்ய அளவிலான ஊழியர் பர்ராக்குறைஏ இது போன்ற குழப்பத்திற்கு காரணமாக இருப்பதைக் காட்டுகிறது.
இந்நிலையில், ஜேர்மன் விமான நிலையங்களில் பணிபுரிய தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களை வரவழைப்பதற்கான கூட்டுப் பிரச்சாரத்தை உள்துறை, தொழிலாளர் மற்றும் போக்குவரத்து அமைச்சகங்கள் தொடங்கஉள்ளன.
விமான நிலையங்களில் சுமார் 2,000 முதல் 3,000 பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், துருக்கியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட திறன் வாய்ந்த தொழிலாளர்களை ஜேர்மனிக்கு கொண்டுவரவுள்ளதாகவும், அவர்கள் ஜூலை முதல் சில மாதங்களுக்கு பணியமர்த்தப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.