யூரோ கிண்ணம்... ஐ.எஸ் அச்சுறுத்தல்: 22,000 பொலிசாருடன் பாதுகாப்பை பலப்படுத்திய ஜேர்மனி
பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் காவல்துறையினரை வரவழைத்து, யூரோ கிண்ணம் தொடரில் பாதுகாப்பு அரணை பலப்படுத்தியுள்ளது ஜேர்மனி.
அச்சுறுத்தல்களுக்கு மத்தியில்
மொத்தம் 22,000 பொலிசார் பாதுகாப்பு பணிகளுக்காக களமிறக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு நிபுணர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார். யூரோ கிண்ணம் 2024 தொடர் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட உள்ளது.
ஐ.எஸ் குழுக்களிடம் இருந்தும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாட்டின் சிறப்பு படைகள், உளவுத்துறை மற்றும் காவல்துறை ஆகிய அனைத்து அமைப்புகளும் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளதுடன், சாத்தியமான தாக்குதலை முறியடிக்க தயார் படுத்தப்பட்டுள்ளது.
ரசிகர்கள் கூட்டத்தை கண்காணிக்க புதிய தொழில்நுட்பங்களுடன் கண்காணிப்பு கமெராக்களும் உளவுத்துறையும் களமிறக்கப்பட்டுள்ளனர். மட்டுமின்றி, ஐ.எஸ் குழுக்களின் தகவல் பரிமாற்றங்களையும் கண்காணிக்க சிறப்பு நிபுணர்கள் குழு களமிறக்கப்பட்டுள்ளனர்.
செர்பியா அணியுடன்
ஜேர்மனியின் உள்விவகார அமைச்சர் நான்சி ஃபேசர் தெரிவிக்கையில், பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் வெளிநாடுகளில் இருந்து 350 காவல்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்து அணியை பொறுத்தமட்டில், ஜூன் 16ம் திகதி செர்பியா அணியுடன் மோதவிருக்கிறது. இந்த நிலையில், செர்பியா அணியின் தீவிர ரசிகர்களால் கலவரம் மூளலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
ஜூன் 20ம் திகதி டென்மார்க் அணியுடன் இங்கிலாந்து மோதவிருக்கிறது. ஜூன் 25ம் திகதி ஸ்லோவேனியா அணியுடன் இங்கிலாந்து மோதவிருக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |