ஜேர்மனியில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட இரண்டு அணு உலைக் கட்டிடங்கள்: வீடியோ
ஜேர்மனியில், அணு உலைக் கட்டிடங்கள் இரண்டு தரைமட்டமாகும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
தரைமட்டமான அணு உலைக் கட்டிடங்கள்

ஜேர்மனியின் Gundremmingen நகரில், அணு உலைகளை குளிர்விப்பதற்காக கட்டப்பட்டிருந்த இரண்டு கட்டிடங்கள் இடித்துத் தரைமட்டமாக்கப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
1980இல் Gundremmingen இல் அமைக்கப்பட்டிருந்த அணு உலையின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்ட நிலையில், அந்த அணு உலையின் குளிர்விக்கும் கட்டிடங்கள் தற்போது இடிக்கப்பட்டுள்ளன.
கட்டுப்பாடான முறையில் தகர்க்கப்பட்ட அந்தக் கட்டிடங்கள் இரண்டும், நொடிகளில் இடிந்து தரைமட்டமாகும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
அந்தக் காட்சிகளைக் காண ஊடகவியலாளர்களுடன் பொதுமக்கள் பலரும் கூடியிருந்த நிலையில், வரலாற்றின் ஒரு அங்கமாக நின்றிருந்த அந்தக் கட்டிடங்கள் இடிக்கப்பட்டது தங்களுக்கு கவலையை ஏற்படுத்துவதாக பொதுமக்களில் சிலர் குறிப்பிட்டார்கள்.
இதற்கிடையில், ஜேர்மனி, அணு ஆற்றலை சார்ந்திருப்பதைக் குறைக்கும் வகையில் எடுத்துவரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |