இந்தியாவில் ரூ.5000 கோடி முதலீடு செய்துள்ள ஜேர்மன் வங்கி.!
பிரபல ஜேர்மன் வங்கியொன்று இந்தியாவில் ரூ.5000 கோடிகளுக்கு மேல் முதலீடு செய்துள்ளது.
ஜேர்மனியின் டாய்ச்சே வங்கி (Deutsche Bank AG), இந்தியாவில் தனது வியாபார வளர்ச்சிக்காக கூடுதலாக ரூ.5,110 கோடி (சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர்) முதலீடு செய்துள்ளது.
இந்த முதலீடு, தக்கவைக்கப்பட்ட வருவாய் மற்றும் பிற சட்டரீதியான கூறுகளுடன் சேர்த்து இந்தியாவில் டாய்ச்சே வங்கி கிளைகளின் மொத்த மூலதனத்தை ரூ.30,000 கோடிக்கு அதிகரிக்கச் செய்துள்ளது.
இது கடந்த ஆண்டை (2023) விட 33 சதவீதம் அதிகம் என்று Deutsche Bank தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பொருளாதாரம் மார்ச் 2025இல் முடிவடையும் நிதியாண்டில் 7.2% வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வலுவான வளர்ச்சி, வெளிநாட்டு நிதி நிறுவனங்களை இந்தியாவில் விரிவாக்கம் செய்ய ஊக்குவிக்கின்றது.
இந்தியாவில் நிறுவன, முதலீட்டு மற்றும் தனிப்பட்ட வங்கித் துறைகளில் சேவைகளை வழங்கும் டாய்ச்சே வங்கி, இந்த முதலீட்டை மூலதனமாகக் கொண்டு மேலும் விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
”இந்தியாவில் பரந்துவாழும் துறைகளில் நாங்கள் மிகப்பாரிய வளர்ச்சி வாய்ப்பு காண்கிறோம்,” என டாய்ச்சே வங்கி EMEA மற்றும் ஜேர்மனி தலைமை செயல் அதிகாரி அலெக்சாண்டர் வான் ஜுர் மியூலன் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |