ஜேர்மனி விமானங்களில் இனி இது கட்டாயம் இல்லை!
விமானங்களில் முகக்கவசம் அணியும் தேவையை ஜேர்மனி கைவிடுகிறது.
இது குறித்து ஜேர்மன் சுகாதார அமைச்சர் சில விவரங்களை கூறியுள்ளார்.
COVID-19 தொற்றுநோய்களின் போது அறிமுகப்படுத்தப்பட்ட வணிக விமானங்களில் முகக்கவச தேவைகளை ஜேர்மனி விரைவில் கைவிடும் என்று சுகாதார அமைச்சர் கார்ல் லாட்டர்பாக் கூறியுள்ளார்.
ஜேர்மனியின் முதன்மை விமான நிறுவனமான லுஃப்தான்சா இந்த விதியை இனி செயல்படுத்த முடியாது என்று புகார் அளித்ததை அடுத்து அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.
அதற்கு பதிலாக, ஜேர்மனியில் பொதுப் போக்குவரத்தில் மக்கள் முகக்கவசங்களை அணிவதை உறுதி செய்வதில் அதிகாரிகள் கவனம் செலுத்துவார்கள் என்று, கூட்டணி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க ஒப்புக்கொண்ட பின்னர், பெர்லினில் Lauterbach கூறினார்.
வரும் இந்த இலையுதிர்காலத்தில் நோய்த்தொற்று அதிகரிப்பதற்கு ஜேர்மனி நன்கு தயாராக இருப்பதாகவும், தொற்றுநோய்கள் அதிகரித்தால் முகக்கவசம் அணியும் விதிகள் சில உட்புற அல்லது வெளிப்புற இடங்களில் திரும்பக்கூடும் என்றும் அவர் கூறினார்.
அப்படி ஒரு சூழலில், விருந்தினர்களின் எண்ணிக்கையை மீண்டும் வரம்பிடுமாறு உணவக உரிமையாளர்கள் மற்றும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் வலியறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.Reuters