இஸ்ரேல் ஆதரவு பேரணி நடத்துவோர் மீது தாக்குதல் நிகழ்த்த திட்டம்: ஜேர்மனியில் ஒருவர் கைது
ஜேர்மன் நகரம் ஒன்றில், தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபடத் திட்டமிட்டிருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜேர்மன் ஊடகங்கள் பல செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் ஆதரவு பேரணி நடத்துவோர் மீது தாக்குதல் நடத்த திட்டம்
மேற்கு ஜேர்மன் நகரமான Duisburgஇல், இஸ்ரேல் ஆதரவு பேரணி நடத்துவோர் மீது வேன் ஒன்றைக்கொண்டு மோதி தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது பெயர் Tarik S. (29) என்றும், ஏற்கனவே 2017ஆம் ஆண்டு ஐ.எஸ் அமைப்பில் உறுப்பினரான இருந்ததற்காக அவர் கைது செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டிலிருந்து கிடைத்த தகவல்
இந்நிலையில், வெளிநாட்டு பாதுகாப்பு அமைப்பு ஒன்றிடமிருந்து, Tarik தாக்குதல் ஒன்றை நிகழ்த்தலாம் என துப்புக் கிடைத்ததாக ஜேர்மன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Tarik இஸ்ரேல் ஆதரவு பேரணி குறித்தும், ஜிஹாதி குறித்தும் இணையத்தில் தேடியதும் தெரியவரவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொலிசார் அவரை நேற்று கைது செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |