உக்ரைனுக்கு உதவுவதற்காக கீவ் சென்றுள்ள ஜேர்மன் அமைச்சர்
ஜேர்மன் பொருளாதாரத்துரை அமைச்சர், உக்ரைன் தலைநகரான கீவ்வுக்குச் சென்றுள்ளார்.
உக்ரைன் சென்றுள்ள ஜேர்மன் அமைச்சர்
ஜேர்மன் பொருளாதாரத்துரை அமைச்சரான கேத்தரினா (Katherina Reiche), உக்ரைன் தலைநகரான கீவ்வுக்குச் சென்றுள்ளார்.

சமீபத்தில் ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் உக்ரைனுடைய மின்சார வலைப்பின்னல் அமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தனது வருகை குறித்து கீவ்வில் ஊடகவியலாளர்களிடம் பேசிய கேத்தரின், ‘உக்ரைன் நான்காவது போர்க்கால குளிர்காலத்தை எதிர்கொள்கிறது.
ரஷ்யா உக்ரைனின் மின்னாற்றல் விநியோகத்தின் மீதான தாக்குதல்களை தற்போது தீவிரப்படுத்தியுள்ளது என்றார்.

அதனால், குளிர்காலத்தில் மின்சாரம் மற்றும் வெப்ப விநியோகத்திற்கு பெருமளவில் அபாயம் உருவாகியுள்ளது என்றார் கேத்தரின்.
ஆகவே, உக்ரைனுடைய மின்சார உள்கட்டமைப்பை பழுதுபார்க்க ஜேர்மனி முன்வந்துள்ளது.
அந்த விடயமாகத்தான் ஜேர்மன் பொருளாதாரத்துரை அமைச்சரான கேத்தரினா கீவ் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |