ஜேர்மனியில் கைது செய்யப்பட்ட எட்டு பேர்: அதிர்ச்சியை உருவாக்கியுள்ள பின்னணி
ஜேர்மனியில், தங்களை பிரிவினைவாதிகள் என அழைத்துக்கொள்ளும் ஒரு குழுவைச் சேர்ந்த வலதுசாரியினர் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
’சாக்ஸன் பிரிவினைவாதிகள்’
கிழக்கு ஜேர்மன் மாகாணமாக சாக்ஸனியிலும், பக்கத்து நாடான போலந்திலுமாக, பல இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டுகளைத் தொடர்ந்து ஜேர்மன் அதிகாரிகள் இந்த எட்டு பேரை கைது செய்துள்ளார்கள்.
அதிர்ச்சிக்குரிய விடயம் என்னவென்றால், இவர்கள் அனைவரும் முறைப்படி ஆயுதங்களைப் பயன்படுத்த பயிற்சிபெற்றவர்கள் என்பதுடன், அவர்களிடமிருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தக் கூட்டத்தினர் தங்களை ’சாக்ஸன் பிரிவினைவாதிகள்’ என அழைத்துக்கொள்கிறார்கள்.
அரசியலிலும், சமுதாயத்திலும் நாகரீக வீழ்ச்சியை ஏற்படுத்தி, தீவிர வலதுசாரி அரசையும் சமுதாயத்தையும் உருவாக்குவதற்காக திட்டமிட்டுவருவதாக கூறப்படுகிறது.
பொலிசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |