தடுப்பூசி பெறாதவர்கள் கவனத்திற்கு... இன்றுடன் ஜேர்மனியில் முடிவுக்கு வரும் சலுகை
இன்று முதல், கொரோனா தடுப்பூசி பெறாத ஜேர்மானியர்கள் தனிமைப்படுத்தல் காரணமாக ஊதியத்தை இழந்தால் அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பாடாது.
ஜேர்மனியில், கொரோனா தொற்றியவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் அல்லது கொரோனா அதிக அபாய நாடு ஒன்றிலிருந்து ஜேர்மனிக்குத் திரும்பியவர்கள் தங்களை குறைந்தபட்சம் ஐந்து நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற விதி நடைமுறையில் உள்ளது.
அப்படி தனிமைப்படுத்திக்கொள்ளும் ஊழியர்கள் இழந்த ஊதியத்தை, ஜேர்மன் அரசு அவர்களுக்கு இழப்பீடாக வழங்கி வந்தது.
ஆனால், அந்த சலுகை இன்றுடன் முடிவுக்கு வருவதாக ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சரான Jens Spahn தெரிவித்துள்ளார்.
மக்கள் தடுப்பூசி பெறுவதை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி பெறுவது ஒருவரது தனிப்பட்ட முடிவு என கருதுவோர், இது தடுப்பூசி பெறாதவர்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தம் என்கிறார்கள் என்று கூறிய அவர், நாம் இன்னொரு கோணத்தில் அதைப் பார்க்கவேண்டும், அதாவது, தடுப்பூசி பெற்றோரை கருத்தில் கொள்ளும்போது, அது நியாயமில்லை என்றும் கருதலாம் என்கிறார்.
தடுப்பூசி பெற்றவர்கள் ஜேர்மனியில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டியதில்லை.