பரபரப்பாக நடந்த இங்கிலாந்து, ஜேர்மனி கால்பந்து போட்டி டிரா! அசத்தலாக கோல் அடித்த ஹேரி கேன்
இந்தப் போட்டியில் ஜேர்மனி வீரர் கய் ஹவேர்ட்ஸ் இரண்டு கோல் அடித்தார்
இங்கிலாந்து கேப்டன் ஹேரி கேன் 83வது நிமிடத்தின்போது பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார்
லண்டனில் நடந்த இங்கிலாந்து மற்றும் ஜேர்மனி அணிகளுக்கு இடையேயான தேசிய லீக் கால்பந்து போட்டி டிராவில் முடிந்தது.
தேசிய லீக் கால்பந்து தொடரின் நேற்றைய போட்டியில் இங்கிலாந்து - ஜேர்மனி அணிகள் மோதின. ஆரம்பம் முதலே இரு அணிகளும் பரபரப்பாக மோதிய நிலையில் ஆட்டத்தில் அனல் பறந்தது.
முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. ஆட்டத்தின் 52வது நிமிடத்தில் ஜேர்மனியின் குண்டோகனும், 67வது நிமிடத்தில் கய் ஹவேர்ட்ஸும் கோல் அடித்தனர்.
இதற்கு பதிலடியாக இங்கிலாந்தின் லுக் ஷா 71வது நிமிடத்தில் கோல் அடித்தார். 75வது நிமிடத்தில் மேசன் மவுண்ட் ஒரு கோல் அடித்தார். இங்கிலாந்து கேப்டன் ஹேரி கேன் பெனால்டி வாய்ப்பில் கோல் அடிக்க, இங்கிலாந்து அணி 3-2 என முன்னிலை வகித்தது.
இதனால் இங்கிலாந்து அணியின் வெற்றி பிரகாசமானது. ஆனால் 87வது நிமிடத்தில் ஜேர்மனி வீரர் கய் ஹவேர்ட்ஸ் கோல் அடித்தார். இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியால் உடனடியாக பதில் கோல் திருப்ப முடியவில்லை. இறுதியில் 3-3 என ஆட்டம் டிராவில் முடிந்தது.
Getty Images