இஸ்ரேலுடன் Arrow 3 ஏவுகனை ஒப்பந்தத்தை விரிவுபடுத்திய ஜேர்மனி
ஜேர்மன் அரசு, இஸ்ரேலுடன் Arrow 3 ஏவுகனை பாதுகாப்பு அமைப்பின் ஒப்பந்தத்தை விரிவுபடுத்தியுள்ளது.
இதன்மூலம், ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு 6.7 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது. இது இஸ்ரேலின் வரலாற்றிலேயே மிகப்பெரிய பாதுகாப்பு ஏற்றுமதி ஒப்பந்தமாகும்.
ஒப்பந்தத்தின் விவரங்கள்
2023-ல் ஜேர்மனி மற்றும் இஸ்ரேல் இடையே கையெழுத்தான ஆரம்ப ஒப்பந்தம் 3.6 பில்லியன் டொலர் ஆகும்.
2025 டிசம்பர் 17 அன்று, இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் ஜேர்மனியுடனான கூடுதல் ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது.

புதிய ஒப்பந்தத்தின் மூலம் Arrow 3 Interceptor Missiles மற்றும் Launch Systems உற்பத்தி அதிகரிக்கப்படும்.
இதன் மதிப்பு மட்டும் 3.1 பில்லியன் அமெரிக்க டொலர் ஆகும்.
ஜேர்மனியில் Arrow 3 பயன்பாடு
2025 டிசம்பர் 3 அன்று, ஜேர்மனியில் முதல் Arrow 3 Battery அதிகாரப்பூர்வமாக சேவையில் இணைக்கப்பட்டது.
இந்த அமைப்பு, ஜேர்மனியின் தேசிய வான்வழி பாதுகாப்பு வலையமைப்பில் ஒருங்கிணைக்கப்படுகிறது.
ரஷ்யாவின் ஏவுகணை அச்சுறுத்தலுக்கு எதிராக பாதுகாப்பை நிலைநாட்டுவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
Arrow 3 தொழில்நுட்ப அம்சங்கள்
Arrow 3 வான் பாதுகாப்பு அமைப்பில் Command Post, Control & Management Systems, Multifunctional Radars, Launchers ஆகியவை அடங்கும்.
100 கி.மீ.க்கும் மேல் உயரத்தில் நடுத்தர மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை துல்லியமாக தகர்க்கும் திறன் கொண்டது.
Hit-to-Kill Method மூலம், எதிரி ஏவுகணைகளை பூமியின் வளிமண்டலத்திற்கு வெளியே அழிக்கும் திறன் கொண்டுள்ளது.
ரஷ்யாவின் Iskander ஏவுகணைகளை ரஷ்யாவின் நிலப்பரப்பிலேயே தகர்க்கும் திறன் கொண்டது.
ஜேர்மனியின் இந்த நடவடிக்கை, ஐரோப்பாவில் பாதுகாப்பு வலிமையை அதிகரிக்கும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. அதேசமயம், இஸ்ரேலின் பாதுகாப்பு தொழில்நுட்பம் உலகளவில் புதிய சாதனையை எட்டியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Germany Israel Arrow 3 missile defense deal, 6.7 billion US Dollars Arrow 3 export agreement Israel, German parliament approves Arrow 3 expansion, Arrow 3 intercepts long-range ballistic missiles, Germany deploys Arrow 3 against Russia threat, Arrow 3 vs Iskander missile interception range, Israel largest defense export contract 2025, Arrow 3 missile system hit-to-kill technology, Germany national air defense network upgrade, Arrow 3 missile defense Europe security boost