பழிக்குப் பழி நடவடிக்கையாக நாடொன்றின் தூதரை வெளியேற்றும் ஜேர்மனி...
ஜேர்மன் தூதரை ஒரு வாரத்திற்கு முன் ஒரு நாடு வெளியேற்றியதைத் தொடர்ந்து, அந்நாட்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாட்டின் தூதரை நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது ஜேர்மனி.
ஜேர்மன் தூதரை வெளியேற்றிய நாடு
சென்ற வாரம், Chad நாடு, அந்நாட்டிற்கான ஜேர்மன் தூதரான Gordon Krickeஐ நாட்டை விட்டு வெளியேற்றியது. Chad, ஒரு மேற்கு ஆப்பிரிக்க நாடாகும்.
ஜேர்மன் தூதர், தூதரக வழக்கங்களை மதிக்கவில்லை என்பதால் அவர் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவதாக அந்நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது.
ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்துவதை தாமதப்படுத்தி இராணுவத்தலைவரான Mahamat Idriss Deby என்பவர் நாட்டை ஆள அந்நாட்டு நீதிமன்றம் அனுமதியளித்ததை ஜேர்மன் தூதரான Kricke விமர்சித்திருந்தார். அதற்காகத்தான் அவர் அந்நட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்.
Christophe Petit Tesson/Pool via Reuters
பழிக்குப் பழி
ஜனநாயக அரசு அமையவேண்டும் என்பதற்காகவும், மனித உரிமைக்காகவும் சரியாகவே தன் கடமையைச் செய்தார் Kricke, என்று கூறியுள்ள ஜேர்மனி, ஜேர்மனிக்கான Chad நாட்டின் தூதரை ஜேர்மனியை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது.
முறையான காரணங்கள் இல்லாமல் ஜேர்மன் தூதர் வெளியேற்றப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், Chad தூதரான Mariam Ali Moussaவை 48 மணி நேரத்தில் ஜேர்மனியை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளதாகவும், இப்படி ஒரு முடிவு எடுக்க நேர்ந்ததற்காக வருந்துவதாகவும், ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.