கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பில் ஜேர்மனி அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ஜேர்மனி அதன் கொரோனா கட்டுப்பாடுகளை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
தீவிரமாக பரவும் ஓமிக்ரான் வைரஸால் கடும் நெருக்கடி ஏற்படும் என அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு எச்சரிக்கை விடுத்ததை தொடரந்து கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தனியார் கூட்டங்களில் 10 பேர் வரை மட்டுமே பங்கேற்க அனுமதி மற்றும் உணவகங்களில் நுழைய பூஸ்டர் தடுப்பூசி போட்டதற்கான ஆதாரம் அல்லது தொற்று பாதிப்பு இல்லை என்ற பரிசோதனை முடிவை வழங்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளை நீட்டிக்க கூட்டாட்சி மாநிலங்களின் தலைவர்களுடன் ஒப்புக்கொண்டதாக அதிபர் Olaf Scholz கூறினார்.
தற்போது கட்டுப்பாடுகளை நீட்டிக்க வேண்டிய நேரம் இது.
பாதிப்புகளின் எண்ணிக்கை அதிக்கும் போது அல்லது குறையும் போது, கட்டுப்பாடுகளை தளர்த்துவது அல்லது கடுமையாக்குவது குறித்து அரசாங்கம் மறுபரிசீலனை செய்யும் என Olaf Scholz கூறினார்.
திங்களன்று ஜேர்மனியில் 63,393 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இது ஒரு வாரத்திற்கு முன்பு இருந்ததை விட 86% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.