ஜேர்மனிக்கு ஆண்டொன்றிற்கு 400,000 பணியாளர்கள் தேவை: திட்டமிட்டுவரும் அரசு
ஜேர்மனி, புலம்பெயர்ந்தோர் நாட்டுடன் ஒருங்கிணைந்து வாழ்வதையும், சட்ட விரோத புலம்பெயர்தலை கட்டுப்படுத்துவதையும் சமநிலைப்படுத்த திணறிவருகிறது.
நாட்டில் ஒரு பக்கம் திறன்மிகுப் பணியாளர்கள் பற்றாக்குறை, மறுபக்கம் எக்கசக்கமான புலம்பெயர்ந்தோர். ஏற்கனவே முன்னாள் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் காலகட்டத்தில் ஜேர்மனிக்கு வந்த புலம்பெயர்ந்தோர் போக, 2022இல் 1.25 மில்லியன் பேர் புதிதாக ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்துள்ளார்கள்.
Reuters
பணியாளர் பற்றாக்குறை
இதற்கிடையில், ஓய்வு பெறும் வயதை எட்டும் பணியாளர்களால், 2036வாக்கில், நாட்டில் 7 மில்லியன் அளவுக்கு பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்படலாம் என்ற நிலை காணப்படுகிறது.
ஆகவே, ஆண்டொன்றிற்கு புதிதாக 400,000 பணியாளர்களை ஜேர்மனிக்கு வரவழைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள ஜேர்மன் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ் அரசு, அதே நேரத்தில், சட்ட விரோதமாக நாட்டுக்குள் நுழைபவர்களுக்கெதிராக கடும் கட்டுப்பாடுகளையும் கொண்டுவர திட்டமிட்டுவருகிறது
Hardt/Geisler-Fotopress/picture-alliance