நான்காவது கோவிட் அலையின் அபாயத்தில் ஜேர்மனி! நிபுணர்கள் கவலை
தடுப்பூசி விகிதங்கள் குறைவாக இருப்பதால் ஜேர்மனி நான்காவது கோவிட் அலையை சந்திக்கும் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.
ஜேர்மனியில் புதிய ஆளும் கூட்டணி இன்னும் உருவாகாத நிலையில், தடுப்பூசி மறுப்பு அதிகமாக இருப்பதால், பாதிப்பு எண்னிக்கை அதிகரிக்கவுள்ளதாக நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும், தடுப்பூசி விகிதங்கள் மேற்கு ஐரோப்பாவின் பிற பகுதிகளை விட ஜேர்மனி பின்தங்கியுள்ளதால், இந்த இலையுதிர்காலத்தில் கோவிட் -19 இன் நான்காவது அலை வேகமாக வளர்ந்து வருவதைப் பற்றிய கவலைகள் அதிகரித்து வருகின்றன.
ஜேர்மனியின் நோய் கட்டுப்பாட்டு நிறுவனம் RKI, 100,000 பேரில் 145 பேர் புதிதாக நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளதால், தொற்று எண்னிக்கை பெருகும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக எச்சரித்துள்ளது.
2020-ஆம் ஆண்டு இதே கட்டத்தில் இருந்த பாதிப்பை விட, இந்த ஆண்டு அதிகமான மக்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் சொந்த தரவுகளின்படி 29 அக்டோபர் 2020 அன்று 131,541 பேர் கோவிட்-19 தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர், அதை 29 அக்டோபர் 2021 அன்று ஒப்பிடும்போது 205,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், ஜேர்மனியில் கொரோனா வைரஸுடன் தொடர்புடைய ஏழு நாள் சராசரி இறப்புகளும் ஒரு வருடத்திற்கு முன்பு 44-ஆக இருந்ததுள்ளது, ஆனால் அது இப்போது 75-ஆக அதிகரித்துள்ளது.
Photo: Rolf Vennenbernd/AP
மேலும் தீவிர சிகிச்சைப் படுக்கைகளில் உள்ள கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை, அக்டோபர் 2020 அளவுகளுக்கு இணையாக உள்ளது.
இந்நிலையில், ஜேர்மன் மருத்துவமனை கூட்டமைப்பின் தலைவர் Gerald Gass "நாம் தொற்றுநோயின் முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். இந்தப் போக்கு தொடர்ந்தால், இரண்டு வாரங்களுக்குள் தீவிர சிகிச்சையில் மீண்டும் 3,000 நோயாளிகள் அனுமதிக்கப்படும் நிலைக்கு நாம் திரும்புவோம்" என்று கூறினார்.
புதிய அரசாங்கத்தை அமைக்கும் அரசியல் காட்சிகள் விரைவில் நோய்த்தொற்று குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்கவேண்தியா சூழலில் நாடு இருக்கிறது.
இதற்கிடையில், கட்டாய முகக்கவசம் அணிதல், சமூக விலகல் மற்றும் இரட்டை தடுப்பூசி இல்லாதவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக அக்கட்சிகள் கூறியுள்ளன.
அதேசமயம், பள்ளி மூடல்கள் மற்றும் ஊரடங்கு உத்தரவு உட்பட நாடு தழுவிய மற்றொரு முடக்கநிலையை அவர்கள் நிராகரித்துள்ளனர்.