ஈரான் உச்ச தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஜேர்மனியில் உருவாகியுள்ள அச்சம்
ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து, ஜேர்மனியில் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
ஜேர்மன் உளவுத்துறையின் எச்சரிக்கை
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது முதல் குண்டு வீசிய சிறிது நேரத்தில் ஜேர்மனியில் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என ஜேர்மன் உள்நாட்டு உளவுத்துறை ஏஜன்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக, ஈரான் உச்ச தலைவர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, பள்ளிகள், தேவாலயங்கள் போன்ற யூத நிறுவனங்கள் குறிவைக்கப்படலாம் என அந்த ஏஜன்சி எச்சரித்துள்ளது.
மேலும், தூதரக பிரதிநிதிகள் அல்லது ராணுவ தளங்கள் தாக்கப்படலாம் என்றும் உளவு ஏஜன்சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உளவுத்துறைக்கான நாடாளுமன்ற மேற்பார்வை கமிட்டியின் தலைவரான Marc Henrichmannம், ஈரானின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு சாத்தியம் உள்ளது என்கிறார்.

ஈரான் எப்போதுமே தான் தன் எல்லைக்கு வெளியில் தாக்குதல்கள் நடத்த விரும்பும் நாடு என்பதை பலமுறை காட்டியுள்ளது என்று கூறும் அவர், என்றாலும், தற்போது ஜேர்மனியில் காணப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக, மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |