ஜேர்மன் மக்களுக்கு வரி நிவாரணம் அறிவிப்பு!
ஜேர்மன் அரசாங்கம் 34 பில்லியன் டொலர் வரி நிவாரண நடவடிக்கைகளுக்கு உறுதியளித்துள்ளது.
ஜேர்மனியின் நிதி அமைச்சர் கிறிஸ்டியன் லிண்ட்னர் (Christian Lindner), புதிய அரசாங்கம் 30 பில்லியன் யூரோக்கள் (34 பில்லியன் டொலர்) வரி நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறினார்.
வரி நிவாரணம் என்பது தனிநபர்கள் அல்லது வணிகங்கள் செலுத்தும் வரிகளின் அளவைக் குறைக்க வடிவமைக்கப்பட்ட அரசாங்க திட்டம் அல்லது கொள்கை முயற்சி ஆகும்.
"இந்த சட்டமன்ற காலத்தில், நாங்கள் 30 பில்லியன் யூரோக்களுக்கு மேல் பொதுமக்கள் மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு வரி நிவாரணம் அளிப்போம்" என்று அவர் ஜேர்மன் செய்தித்தாள் Bild-இடம் கூறினார்.
திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளில் ஓய்வூதியக் காப்பீட்டிற்கான பங்களிப்புகளை வரி செலுத்துதலில் இருந்து முழுமையாகக் கழிக்கப்படும் என்று லிண்ட்னர் கூறினார்.
அடுத்த ஆண்டு (2023) வரைவு பட்ஜெட்டில் இந்த நிவாரணம் சேர்க்கப்படும் என்றும் அவர் கூறினார்.
Photo: REUTERS/Annegret Hilse
கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் ஜேர்மனி பல்லாயிரக்கணக்கான யூரோக்களை ரொக்க செலுத்துதல்கள் மற்றும் கடன்களில் ஒதுக்கீடு செய்துள்ளது.