எரிபொருள் வரி குறைப்பு மற்றும் விலை உச்சவரம்பு நிர்ணயம்: ஜேர்மன் அரசின் அதிரடி அறிவிப்பு
Germany Govt announced fuel discount: ஜேர்மனியில் எரிபொருள் மீதான வரி குறைப்பு மற்றும் விலை உச்சவரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் வரி குறைப்பு
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையை தொடர்ந்து ஜேர்மனியின் எரிபொருள் சந்தை கடுமையான விலை ஏற்றம் கண்டது.
இந்நிலையில் ஜேர்மனி ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோக தடை மற்றும் கடுமையான ஆற்றல் செலவினங்களை கட்டுப்படுத்த எரிபொருள் மீதான வரி குறைப்பு மற்றும் விலை உச்சவரம்பு உள்ளடக்கிய நிவாரணத் தொகுப்பு ஆகியவற்றை ஜேர்மன் அரசாங்கம் வெள்ளிக்கிழமை இரவு இறுதி செய்துள்ளது.
கூட்டாட்சி மற்றும் மாநில அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்று வந்த பல வார பேச்சுவார்த்தைக்கு பிறகு ஜேர்மன் சான்சிலர் பிரெட்ரிக் மெர்ஸ்(Friedrich Merz) தலைமையிலான கூட்டணி அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்த புதிய நடவடிக்கையின் கீழ், அக்டோபர் மாதம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி 17 சென்ட்கள் குறைக்கப்படுகிறது.
மேலும் வாகன ஓட்டிகளுக்கான மோட்டார் எரிபொருளின் விலை உச்சவரம்பு ஜனவரி 2027-லில் அமலுக்கு வரவுள்ளது.
பெர்லின், மெக்லென்பர்க்-வெஸ்டர்ன் பொமெரேனியா ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள 2 நாட்களுக்கு முன்பு இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.