ஜேர்மனியின் முதல் federal police commissioner: சில தகவல்கள்
ஜேர்மனியின் பெடரல் பொலிஸ் துறைக்கு முதன் முறையாக பொலிஸ் கமிஷனர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜேர்மனியின் முதல் federal police commissioner
ஜேர்மனியின் உதல் பெடரல் பொலிஸ்கமிஷனராக Uli Grötsch (48) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், Social Democratic Partyயின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். முன்னாள் பெடரல் பொலிஸ் அதிகாரியான Uliக்கு, தற்போது ஜேர்மனியின் முதல் பெடரல் பொலிஸ் கமிஷனர் என்னும் பொறுப்பு கையளிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் துறை மற்றும் பிற பாதுகாப்பு ஏஜன்சிகளில் பணி புரிவோர் மீது பல்வேறு நடத்தை மற்றும் கவனக்குறைவு புகார்கள் வந்துள்ளதைத் தொடர்ந்து, அவை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக இப்படி ஒரு பதவியை உருவாக்க பெடரல் அரசு முடிவு செய்துள்ளது.
மேலும், கடந்த சில ஆண்டுகளாக ஜேர்மனியில் பொலிஸ் துறைக்குள்ளேயே இனவெறுப்பு புகார்கள் பல தெரிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் இன அடிப்படையில் மக்களை சோதனையிடுதல் போன்ற விடயங்களை பொலிஸ் துறையிலுள்ள சில வலதுசாரி ஆதரவு பொலிசார் மேற்கொள்வது போன்ற புகார்களும் உள்ளன. ஆகவே, இவ்வித புகார்களைக் கையாளும் வகையில் ஜேர்மனிக்கு பெடரல் கமிஷனர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்படி, பெடரல் பொலிஸ் கமிஷனர் என்னும் பதவி உருவாக்கப்படும் முதல் நாடு ஜேர்மனி அல்ல. அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் பிரித்தானியாவில் பெடரல் பொலிஸ் கமிஷனர் என்னும் பதவி ஏற்கனவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.