விலைவாசி தொடர்பில் ஒரு கெட்ட செய்தியும் ஒரு நல்ல செய்தியும்... ஜேர்மன் பொருளாதார ஆராய்ச்சியாளர்கள் கூறும் தகவல்
ஜேர்மனியைப் பொருத்தவரை பணவீக்கம் உச்சம் தொட்டுவிட்டதாக தெரிவித்துள்ள பொருளாதார ஆராய்ச்சியாளர்கள், இனி அது வீழ்ச்சியடையும் என்று கூறியுள்ளார்கள்.
அதே நேரத்தில், உணவுப்பொருட்களின் விலை இன்னமும் உயரத்தான் செய்யும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
2022ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில், நுகர்வோர் தயாரிப்புகளின் விலைகள் ஜேர்மனியில் மீண்டும் வீழ்ச்சியடையலாம் என முன்னணி பொருளாதார ஆய்வமைப்பு ஒன்று இன்று தெரிவித்துள்ளது.
விலைகள் தொடர்ந்து உயரலாம் என தெரிவித்துள்ள IFO நிறுவனத்தில் வர்த்தக சுழற்சி ஆய்வு மற்றும் முன்னோட்டப் பிரிவின் தலைவரான Timo Wollmershäuser, ஆனால், அது மெதுவாகத்தான் இருக்கும் என்கிறார். அதாவது, பணவீக்கம் தன் உச்சத்தை அடைந்துவிட்டது, இனி அது குறையத்துவங்கும் என்பது அதன் பொருள் என்கிறார் அவர்.
ஜூலையில் ஜேர்மனியில் பணவீக்கம் 7.6சதவிகிதத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.