ஜேர்மனியில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வெப்பம்: 15,800-ஐ தாண்டிய உயிரிழப்பு
Germany Heat Related Death Toll Reach 15800: ஜேர்மனியில் வெப்ப அலைகள் காரணமாக கிட்டத்தட்ட 15,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
பத்தாண்டுகளில் இல்லாத உயிரிழப்பு
ஜேர்மனியில் இந்த ஆண்டு ஏற்பட்ட கடுமையான வெப்பம் காரணமாக இதுவரை 15,800 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிலான அதிகமான உயிரிழப்பு எண்ணிக்கையாகும்.

ஜேர்மனியில் ஏற்பட்டுள்ள தீவிர வானிலை நிலைமைகள் நாட்டின் பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதாக ஜேர்மனியின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு முகாமையான ராபர்ட் கோக் இன்ஸ்டிடியூட் தகவல் வெளியிட்டுள்ளது.
அதிகமான வெப்பம் பதிவான நாட்கள்
ஜூன் மாத இறுதியில் ஏற்பட்ட கடுமையான வெப்ப அலைகளில் கிட்டத்தட்ட 9600 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
அதைப்போல ஆகஸ்ட் மாதத்தில் முதல் இரண்டு வாரங்களில் ஏற்பட்ட தீவிரமான வெப்ப அலைகளில் கிட்டத்தட்ட 4000 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கு முன்னதாக கடந்த 2018ம் ஆண்டு அதிகமான வெப்பம் காரணமாக சுமார் 9500 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டின் உயிரிழப்புகளின் தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட குறைவான மதிப்பீடுகள் மட்டுமே, கூடுதல் தரவுகள் கிடைக்கப்பெறும் போது உயிரிழப்புகளின் இறுதி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று ராபர்ட் கோக் இன்ஸ்டிடியூட் எச்சரித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |