மருத்துவமனைக்குள் நுழைந்த மர்ம நபர் செய்த செயலால் அதிர்ச்சியில் ஆழ்ந்த ஊழியர்கள்
ஜேர்மனியில் மருத்துவமனை ஒன்றிற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், வில் அம்பு மூலம் பெண் ஊழியர் ஒருவரைத் தாக்கிக்கொன்றதால், அவரது சக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.
மருத்துவமனைக்குள் நுழைந்த மர்ம நபர் கொடுத்த அதிர்ச்சி
புதன்கிழமையன்று ஜேர்மனியின் Hesse மாகாணத்திலுள்ள Bad Zwesten என்னுமிடத்தில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றிற்குள் திடீரென வில் அம்புடன் நுழைந்தார் ஒருவர்.
அவர் அங்கிருந்த 50 வயதுடைய பெண் ஊழியர் ஒருவரைத் தாக்க, படுகாயமடைந்த அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.
அந்தப் பெண்ணைத் தாக்கியவர் அருகிலுள்ள மருத்துவப்பிரிவு ஒன்றிற்குள் நுழைந்து, பின் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
அவர் Passau நகரத்தைச் சேர்ந்தவர் என பொலிசாருக்குத் தெரியவந்த நிலையில், அவரைத் தீவிரமாகத் தேடத்துவங்கினார்கள் அவர்கள்.
அதைத் தொடர்ந்து, இரவுக்குள் அந்த 58 வயது நபரை பவேரியா மாகாணத்தில் வைத்து மடக்கிப் பிடித்துவிட்டார்கள் பொலிசார்.
அவர் யார், எதற்காக அந்தப் பெண் ஊழியரைக் கொலை செய்தார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள மருத்துவமனை ஊழியர்களுக்கு மனோவியல் நிபுணர்களும், பாதிரியர்களும் ஆலோசனை வழங்கிவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |