ஜேர்மனியில் புதிய Mpox வைரஸின் முதல் தோற்று பதிவு
ஜேர்மனியில் புதிய Mpox வைரஸ் வகையின் முதல் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று Robert Koch Institute (RKI) அறிவித்துள்ளது.
அக்டோபர் 18, 2024 அன்று வெளிநாட்டில் பரவிய இந்த தொற்றே நோய்க்கான மூலமாக இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பரவல் மிக நெருக்கமான உடல் தொடர்பின் மூலம் மட்டுமே சாத்தியம் என RKI குறிப்பிட்டுள்ளது.
RKI, பொதுமக்களுக்கான சுகாதாரப் பாதிப்பு குறைந்ததாகவே மதிப்பீடு செய்துள்ளது. இருப்பினும், நிலையை கவனித்துக் கொண்டு தேவைப்பட்டால் தனது மதிப்பீட்டில் மாற்றம் செய்வதாகவும் அறிவித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் (WHO) Mpox வைரஸ் பரவலை ஆபத்தான பொது சுகாதார அவசரநிலையாக ஆகஸ்ட் 2024ல் அறிவித்தது.
இந்த வைரஸ் முதலில் காங்கோவில் (Democratic Republic of Congo) பரவியது மற்றும் அயல்நாடுகளுக்கும் சென்று சேர்ந்தது.
ஆகஸ்ட் 15, 2024 அன்று, ஆப்பிரிக்காவிற்கு வெளியே ஸ்வீடனில் புதிய Mpox மாறுபாடு கண்டறியப்பட்டது. இதன் மூலம், புதிய மாறுபாடு உலகளாவிய கவலையை உருவாக்கி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Germany first case of new mpox variant, Germany mpox