ஜேர்மனி: புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது
2023ஆம் ஆண்டு, ஜேர்மனிக்கு ஏராளமானோர் புலம்பெயர்ந்ததாக ஜேர்மன் பெடரல் புள்ளியியல் அலுவலகம் தெரிவிக்கிறது. ஆனால், கூட்டிக்கழித்துப் பார்த்தால், முந்தைய ஆண்டைவிட ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு!
புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது
2023ஆம் ஆண்டு, சுமார் 663,000க்கும் அதிகமானோர் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்தார்கள். ஜேர்மனியை விட்டு அந்த ஆண்டில் வெளியேறியவர்களைவிட, ஜேர்மனிக்கு வந்தவர்கள் எண்ணிக்கை அதிகம் என்கின்றன நேற்று வெளியான அதிகாரப்பூர்வ தரவுகள்.
ஆனால், 2022இல் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்தவர்கள் 1,462,000 பேர். அதாவது, 2022இல் புலம்பெயர்ந்தவர்களை விட 2023இல் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை 45 சதவிகிதம் குறைவு ஆகும்.
மொத்தமாக பார்க்கும்போது, 1,933,000 புலம்பெயர்ந்தோர் ஜேர்மனிக்கு வந்துள்ளார்கள், 1,270,000 பேர் ஜேர்மனியைவிட்டு வெளியேறியுள்ளார்கள். ஆக, புலம்பெயர்தல் விகிதம் 28 சதவிகிதம் குறைந்துள்ளது.
ஜேர்மனியிலிருந்து வெளியேறுவோர், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா மற்றும் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்துள்ளார்கள் என்கின்றன பெடரல் புள்ளியியல் அலுவலகத் தரவுகள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |