ஒரே கூரையின் கீழ் அகதிகளும் ஜேர்மன் மக்களும்: ஜேர்மனியின் திட்டம்
Germany: Inclusive housing for migrants and non migrants: புலம்பெயர்ந்தோரும் புலம்பெயர்ந்தோர் அல்லாதவர்களும் இணைந்து வாழும் ஒரு திட்டம், ஜேர்மனியில் சோதனை முறையில்.
அகதிகளும் ஜேர்மன் மக்களும் ஒரே கூரையின் கீழ் இணைந்து வாழும் திட்டம் ஒன்றை சோதனை முயற்சியாக மேற்கொண்டுவருகின்றன சில தொண்டு நிறுவனங்கள்.
நம்பிக்கை இல்லம் திட்டம்
இந்த திட்டம், ’நம்பிக்கை இல்லம்’ திட்டம் என அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், புலம்பெயர்ந்த மற்றும் புலம்பெயராத பின்னணியைச் சேர்ந்த மக்கள் ஒரே கூரையின் கீழ் ஒன்றாக வாழ்கின்றனர்.

வெவ்வேறு நாடுகளையும், மதங்களையும், தலைமுறைகளையும் சேர்ந்த மக்கள், அகதிகளும் ஜேர்மன் குடிமக்களும் இந்த அமைப்பில் ஒரே கூரையின் கீழ் வாழ்கின்றார்கள்.
அகதிகள் ஜேர்மனியுடன் இணைந்து வாழ்வதை வித்தியாசமான முறையில் முயற்சிக்கிறது இந்த திட்டம்.
ஆரம்பத்தில் ஜேர்மானியர்கள் பலர் இது சாத்தியமா என சந்தேகித்த நிலையில், இப்போது அத்திட்டம் நன்கு செயல்படுகிறது என அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள்.
இன்னொரு முக்கிய விடயம், இந்த வீடுகளில் வாடகை வழக்கமாக வீட்டு வாடகையைவிட மூன்றில் ஒரு பங்குதான் என்பது குறிப்பிடத்தக்கது.