ஜேர்மனியில் துணை மின் நிலைய தாக்குதல்கள்..சந்தேக நபர் குறித்து விசாரணை
Germany investigating after another substation fire: ஜேர்மனியில் மற்றொரு மின் துணை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் ஹைபிரிட் தாக்குதல் குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், ஜேர்மனியில் மற்றொரு மின் துணை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியை குறிவைத்து
ஐரோப்பிய நாடான ஜேர்மனியை குறிவைத்து சம்பவம் தொடர்ச்சியாக நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த சூழலில், திங்களன்று பெர்லினில் உள்ள ஒரு மின் துணை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதம் உண்டானது.
இதுகுறித்து பேசிய காவல்துறையினர், "கட்டுமானப் பணி நடைபெறும் இடம் மற்றும் துணை மின் நிலையத்தின் ஒரு பகுதி ஆகியவை தீயில் எரிந்து சேதமடைந்தன. இதனால் விநியோகத்தில் எந்தத் தடங்கலும் ஏற்படவில்லை" என்றனர்.
மேலும், நாசவேலை குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இது நாசவேலையா அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருவதாக என்றும் தெரிவித்தனர்.
இதற்கிடையில், நிலக்கரி மின் நிலையங்களில் இருந்து மின்சார விநியோகத்தைத் துண்டிக்கும் நோக்கில், கடந்த வாரம் ஜேர்மனி முழுவதும் உள்ள துணை மின் நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களுக்குக் காரணமானவர் என்று சந்தேகிக்கப்படும், தீவிரப் போக்குடைய சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |