மோசமான நாடு என பெயர் வாங்கியுள்ள ஜேர்மனி: அதை மாற்ற அரசியல்வாதிகள் விடுத்துள்ள கோரிக்கை
ஐரோப்பாவின் பாலியல் விடுதி என விரைவில் பெயர் பெற்றுவிடும் அளவுக்கு ஜேர்மனியின் நிலைமை மோசமாகிக்கொண்டே செல்கிறது.
சட்டப்படி அங்கீகாரம்
ஜேர்மனியில் 2002ஆம் ஆண்டு பாலியல் தொழில் சட்டப்பூர்வமாக்கப்பட்டது. பாலியல் தொழிலாளிகளின் நலன் கருதியே அப்படியொரு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், இன்று வரை அதனால் அவர்கள் பெரிய அளவில் பலனடைந்தாற்போலில்லை.
அரசியல்வாதிகள் கோரிக்கை
பாலியல் தொழில் பெருத்துப்போனதால், ஜேர்மனி, ஐரோப்பாவின் பாலியல் விடுதி என விரைவில் பெயர் பெற்றுவிடும் அளவுக்கு நிலைமை மோசமாகிக்கொண்டே செல்கிறது.
ஆகவே, அரசியல்வாதிகள் பலர், ஜேர்மனியில் பாலியல் தொழிலுக்கு தடை விதிக்கக் கோரி வருகிறார்கள். உண்மையாகச் சொன்னால், பாலியல் தொழிலாளிகளிடம் செல்வோருக்கு அபராதம் விதிக்கவேண்டும், ஆனால், பாலியல் தொழிலாளிகள் தண்டிக்கப்படக்கூடாது என அரசியல்வாதிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
File image
ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸும், ஆண்கள் பணம் கொடுத்து பெண்களை வாங்குவதை தன்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்றும், இந்த பிரச்சினையை தீர்க்க விவாதிக்கவேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |