ஜேர்மனிக்கு சுற்றுலா சென்ற 7 வயது சிறுமிக்கு நடந்த விபரீதம்; குடும்பத்தினர் சோகம்
ஜேர்மனியில் 7 வயது சிறுமியின் மீது சிலை விழுந்ததால் உடல் நசுங்கி உயிரிழந்தார்.
இத்தானிலியில் இருந்து சுற்றுலாவிற்காக வந்த குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஜேர்மனிக்கு சுற்றுலா வந்திருந்த இத்தாலியைச் சேர்ந்த குடும்பம் அவர்களது 7 வயது மகளை இழந்து சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
முனிச்சில் விடுமுறையில் இருந்த இத்தாலியக் குடும்பம், அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்த 200 கிலோ (440-பவுண்டு) எடையும், 4 அடி 7 அங்குல உயரம் கொண்ட பளிங்கு கற்சிலை குழந்தையின் மேல் விழுந்ததால் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் வெளியிட்ட ஜேர்மன் பொலிஸார், கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவித்தனர்.
ஹோட்டலின் முற்றத்தில் சிறுமியின் மீது சிலை விழுந்தது. ஆனால் 200 கிலோ எடையுள்ள அந்த சிலை அவர்மீது விழுந்ததற்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
தகவல்களின்படி, சிறுமி இத்தாலியின் Naples நகரத்தைச் சேர்ந்த Lavinia Trematerra என அடையாளம் காணப்பட்டுள்ளது. சிறுமி அவரது பெற்றோர்களுடன் விடுமுறைக்கு ஜேர்மனி வந்துள்ளார்.
சம்பவ இடத்தில் இருந்தவர்கள் குழந்தையை சிலைக்கு அடியில் இருந்து விடுவிக்க உதவினர் மற்றும் அவசர சேவையை அழைத்துள்ளனர்.
அவசர சேவை மருத்துவர்கள் வந்தனர், பின்னர் சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு நிலையில், அங்கு அவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.