ஐரோப்பிய ஒன்றியத்தின் ICE கார் தடையை தளர்த்த முயற்சிக்கும் ஜேர்மனி, இத்தாலி
ஐரோப்பிய ஒன்றியத்தின் கார் எஞ்சின் தடை விதியை தளர்த்த முயற்சிக்கும் ஜேர்மனி மட்டும் இத்தாலி இணைந்து தளர்த்த முயற்சிக்கிறது.
ஜேர்மனி மற்றும் இத்தாலி அரசுகள், 2035-ஆம் ஆண்டிலிருந்து புதிய ICE (Internal combustion engine) கார்கள் விற்பனைக்கு தடை விதிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் விதியை தளர்த்தும் முயற்சியில் இணைந்துள்ளன.
ரோம் நகரில் நடைபெற்ற ஜேர்மன்-இத்தாலிய அமைச்சரவை மாநாட்டில், ஜேர்மன் பொருளாதார அமைச்சர் காதெரினா ரெய்ச் மற்றும் இத்தாலி தொழில் அமைச்சர் அடோல்ஃபோ உர்சோ சந்தித்து, தொழில் போட்டித்திறனை பாதுகாக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனர்.
இரு நாடுகளும் வெளியிட்ட 24 அம்சங்களைக் கொண்ட “Italian-German Action Plan” திட்டத்தில், 2035-க்குப் பிறகும் Plug-In Hybrid கார்கள் மற்றும் குறைந்த அல்லது பூஜ்ய உமிழ்வு எரிபொருள்களைப் பயன்படுத்தும் திறமையான எஞ்சின் கார்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.

ஆனால், அவற்றின் உமிழ்வுகள் வரையறை செய்யப்பட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
“ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய கொள்கைகள் காரணமாக, ஆட்டோமொபைல் மற்றும் கார் உதிரி பாகங்கள் தொழில் கடுமையாக பாதிக்கப்படுகிறது” என இரு நட்டு அமைச்சர்களும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், Carbon Border Adjustment Mechanism (CBAM) தொடர்பாகவும் இரு நாடுகள் மாற்றங்களை கோரியுள்ளன. குறிப்பாக, கார்பன் லீக்கேஜ் அபாயத்தை குறைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், CBAM முழுமையாக செயல்படும் வரை இலவச உமிழ்வு அனுமதிகளை (free allowances) நீக்கக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
அதோடு, ரசாயனத் துறை வேலைவாய்ப்பு மற்றும் மூலதன முக்கியத்துவம் காரணமாக சிறப்பு கவனம் பெற வேண்டும் எனவும், Critical Chemicals Alliance-ன் மூலம் ஐரோப்பிய ரசாயன உற்பத்தியாளர்களின் போட்டித்திறனை வலுப்படுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனி-இத்தாலி அதிகாரிகள், வரும் ஜனவரி 23, 2026 அன்று ரோம் நகரில் மீண்டும் சந்தித்து, இந்த Action Plan-ஐ மேம்படுத்த உள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். https://whatsapp.com/channel/0029VaSCBEu4CrfcPW75ea2Q |
Germany Italy EU 2035 car ban, EU combustion engine phaseout debate, Italian-German Action Plan auto policy, Plug-in hybrids post-2035 EU proposal, Low-emission fuels car sales Europe, Carbon Border Adjustment Mechanism CBAM, EU auto industry competitiveness crisis, European chemicals sector transition, Germany Italy climate policy alliance, EU transport green policy negotiations