ஜேர்மனியில் நடந்த பயங்கர ச,ம்பவம்... 3 பேர் பலி-பலர் காயம்: கமெராவில் பதிவான வீடியோ காட்சி
ஜேர்மனியில் நடந்த கத்தி குத்து சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜேர்மனியின் Wurzburg நகரின் Barbarossaplatz-ல் இந்த சம்பவம் நடந்துள்ளது. முகக்கவசம் அணிந்திருக்கும் அந்த நபர், கையில் ஒரு பெரிய நீள கத்தியுடன், அங்கிருக்கும் மக்களை கத்தியால் குத்து முயற்சி செய்வதை பார்க்க முடிகிறது.
இதில் ஒரு சிலர் அவரிடம் இருந்து தப்பிக்க ஓடுகின்றனர். அதில் ஒரு சிலர் அவரிடம் இருந்து அந்த கத்தியை பிடுங்க முயற்சிக்கின்றனர். இது தெருக்கும்பலால் நடந்த சண்டையா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து தெரியவில்லை.
On est vendredi... #Würzburg #Allemagne https://t.co/4OzthDTegW pic.twitter.com/PgJ10CP1cu
— Jeanne (@D4rc_) June 25, 2021
ஆனால் இந்த சம்பவம் காரணமாக, தற்போது அவரை 3 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 6 பேர் காயமடைந்திருப்பதாகவும் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்த சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த பொலிசாரையும், அந்த நபர் தாக்க முயற்சித்துள்ளான். இதனால் பொலிசார் அவரின் காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர்.
Gold bestellt... Gold geliefert...#Würzburg pic.twitter.com/zipROwG2db
— He-Man (@LONE81) June 25, 2021
அந்த நபர் யார் என்பதும், எதற்காக இந்த கொடூர செயலை செய்தார் என்பது குறித்து எந்த ஒரு விவரமும் வெளியாகவில்லை. தற்போது பொலிசார் அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோ காட்சியும் வெளியாகியுள்ளது.
#Germany: 2 people dead and multiple injured in stabbing attack at Barbarossaplatz in #Wuerzburg, Germany. pic.twitter.com/1LVY5LKrjE
— Nikhil Choudhary (@NikhilCh_) June 25, 2021