ஜேர்மனியை பிரித்தானியா முதலான நாடுகளுடன் இணைக்கும் புதிய எரிவாயுக்குழாய் திட்டம் துவக்கம்
ஜேர்மனியை பிரித்தானியா முதலான சில நாடுகளுடன் இணைக்கும் எரிவாயுக்குழாய் திட்டம் ஒன்றை ஜேர்மனி துவக்கியுள்ளது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க எரிவாயுக்குழாய் திட்டம்
ஜேர்மனி, பிரித்தானியா, நெதர்லாந்து, பெல்ஜியம், டென்மார்க், மற்றும் நோர்வே ஆகிய நாடுகளுடன் பசுமை ஹைட்ரஜன் எரிவாயுவை பகிர்ந்துகொள்ளும் திட்டம் ஒன்றைத் துவக்கியுள்ளது.

வரலாற்றுச் சிறப்பு மிக்கது என கருதப்படும் அந்த எரிவாயுக் குழாய் திட்டம், அக்வாடக்டஸ் (AquaDuctus) என அழைக்கப்படுகிறது.
பெர்லினில் 45,000 வீடுகள் இருளில் மூழ்கிய விவகாரம்: ஒரு மில்லியன் யூரோக்கள் பரிசு அறிவித்ததன் விளைவு
இந்த திட்டத்துக்காக வடகடலில் குழாய் பதிப்பது முதலான பல்வேறு பணிகளை செய்து முடிக்க, அவுஸ்திரேலிய நிறுவனமான Worley, சுவிஸ் நிறுவனமான StreamTec Solutions AG முதலான நிறுவனங்கள் கைகோர்த்துள்ளன.
இத்திட்டத்தின் முதல் கட்டப்பணிகள் 2030இல் முடிவடையும் என்றும், 2035இல் திட்டம் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |