பிரான்சுடனான எல்லைக் கட்டுப்பாடுகளை நீக்கிய அண்டை நாடு
ஜேர்மனி, பிரான்சுடனான எல்லைக் கட்டுப்பாடுகளை நீக்கியுள்ள விடயம், பொதுமக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
எல்லைக் கட்டுப்பாடுகள்
கடந்த ஆண்டு, அதாவது, 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி, ஜேர்மனி பிரான்சுடனான எல்லையில் கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்தது.
அளவுக்கதிகமான முறைப்படுத்தப்படாத புலம்பெயர்தல், ஆட்கடத்தல் கும்பல்கள் ஆகியவை ஜேர்மனியின் புகலிட அமைப்பின்மீது ஏற்படுத்திய அழுத்தத்தைக் காரணமாக காட்டி, எல்லைக் கட்டுப்பாடுகளை ஜேர்மனி அமுல்படுத்தியது.

அதைத் தொடர்ந்து, பிரான்சிலிருந்து ஜேர்மனிக்கு வருவோர் எண்ணிக்கை 38 சதவிகிதம் குறைந்தது.
அதனால், தங்கள் வியாபாரம் பாதிக்கப்படுவதாக எல்லைக்கு இரு பக்கமும் உள்ள வியாபாரிகள் புகார் தெரிவித்திருந்தார்கள்.
இந்நிலையில், பிரான்சுடனான எல்லைக் கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாக தற்போது ஜேர்மன் அரசு தெரிவித்துள்ளது.
அதனால், எல்லை கடந்து பயணிக்கும் பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய இரு நாடுகளையும் சேர்ந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |