எரிபொருள் பற்றாக்குறையால் ஜேர்மனி விமான நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு
மத்திய கிழக்கில் போர் காரணமாக, ஐரோப்பாவின் இரண்டு மிகப்பெரிய விமான நிறுவனங்கள் தங்களது விமானப் பயணங்களை ரத்து செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
எரிபொருள் கையிருப்பு
ஈரான் போரின் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியால், ஐரோப்பாவிடம் இன்னும் ஆறு வாரங்களுக்கு போதுமான விமான எரிபொருள் கையிருப்பு மட்டுமே எஞ்சியுள்ளதாக தகவல் வெளியானது.

ஐரோப்பாவின் மொத்த விமான சேவைகளும் பாதிக்கப்படும் நெருக்கடி ஏற்படக்கூடும் என, சர்வதேச எரிசக்தி முகமையின் நிர்வாக இயக்குநர் ஃபாத்திஹ் பிரோல் தெரிவித்தார்.
இந்த நிலையில், ஜெட் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், ஐரோப்பாவின் இரண்டு மிகப்பெரிய விமான நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான விமானப் பயணங்களை ரத்து செய்துள்ளன.
குறிப்பாக, ஜேர்மனியைச் சேர்ந்த லுஃப்தான்சா நிறுவனம், தனது பிராந்திய துணை நிறுவனமான லுஃப்தான்சா சிட்டிலைன் சனிக்கிழமை முதல், தனது செயல்பாடுகளை நிறுத்தி வைக்கும் என்று வியாழக்கிழமை அன்று அறிவித்தது.
160 விமானப் பயணங்கள்
அதிக மண்ணெண்ணெய் விலை மற்றும் தொழிலாளர் தகராறுகள் இதற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது.
அதேபோல் நெதர்லாந்தைச் சேர்ந்த KLM என்ற நிறுவனம், அதிகரித்து வரும் எரிபொருள் விலையின் விளைவாக, அடுத்த மாதம் முழுவதும் 160 விமானப் பயணங்களை ரத்து செய்துள்ளது.
இதற்கிடையில், உலகளாவிய எரிசக்தி கண்காணிப்பு அமைப்பின் தலைவர், ஆறு வாரங்களில் ஐரோப்பாவில் ஜெட் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |