ஜேர்மனியில் பொலிஸ் நாயைக் கடித்த நபர், அதிகாரியை குத்திய பெண் கைது
இரண்டு ஆண்கள் மற்றும் பெண்ணுக்கு இடையே நள்ளிரவில் தகராறு.
கைது செய்யப்பட மூன்று பேரும் இரவு உழுவதும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டனர்.
ஜேர்மனியில் காவலர்கள் கைது செய்யத் தடுத்ததற்காகவும், பொலிஸ் சேவை நாயைக் கடித்ததற்காகவும் ஒருவரைக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஜேர்மனியின் மேற்கு நகரமான கின்ஷெய்ம்-குஸ்டாவ்ஸ்பர்க்கில் வெள்ளிக்கிசமாய் நள்ளிரவுக்குப் பிறகு 29 வயதுடைய இரண்டு ஆண்களுக்கும் 35 வயதுடைய பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதிக்கு அதிகாரிகள் அழைக்கப்பட்டனர். மூவரும் மிகவும் ஆக்ரோஷமான மற்றும் ஒத்துழைக்காத பாணியில் செயல்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதனால், அதிகாரிகள் பாரிய உடல் பலத்தை பயன்படுத்தி ஒருவரை மட்டுமே கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது.
மற்றோரு 29 வயதுடைய இளைஞன் கைது செய்ய முயற்சித்தபோது, அவர் காவல் அதிகாரிகளுடன் இருந்த சேவை நாயை கடித்துள்ளார். ஆனால் நாய்க்கு பெரிதாக எந்த காயமும் ஏற்படவில்லை.
PetPlace (Representative)
இதற்கிடையில், 35 வயதான பெண் ஒரு பொலிஸ் அதிகாரியின் முகத்தில் குத்தி காயப்படுத்தினார்.
இந்த சம்பவத்தில் இறுதியில் மூவரையும் கைது செய்த பொலிஸார், அன்று இரவு முழுவதும் சிறையில் வைத்தனர். அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.