ஜேர்மனியில் பாதசாரிகள் மீது கார் மோதிய தாக்குதல்! 2 பேர் பலியான நிலையில் பொலிஸார் குவிப்பு
ஜேர்மனியின் மான்ஹெய்ம் நகரில் கார் மோதிய சம்பவத்தில் இருவர் உயிரிழந்து இருப்பதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
ஜேர்மனியின் மான்ஹெய்ம் நகரில், பாரேட்ப்ளாட்ஸ் (Paradeplatz) என்ற மையப் பகுதியில் பாதசாரிகள் கூட்டத்தின் மீது கார் மோதிய கோர விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
மதியம் 12:15 மணியளவில் பாதசாரிகள் மட்டுமே செல்லும் பகுதியில் நடந்த இந்தத் தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இதையடுத்து பெரும் பொலிஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சாட்சிகளின் கூற்றுப்படி, கார் மோதல் தாக்குதலுக்கு பிறகு தரையில் பலர் காயங்களுடன் கிடந்ததுடன் மற்றும் அவசர உதவி பணியாளர்கள் உயிர் காக்கும் முயற்சிகளில் ஈடுப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
சந்தேக நபர் கைது
சட்ட அமலாக்க அதிகாரிகள் விரைவாக ஒரு சந்தேக நபரை கைது செய்தனர். அவர் ரைன்லேண்ட்-பாலடினேட் (Rhineland-Palatinate) மாநிலத்தை சேர்ந்த 40 வயது ஜெர்மன் குடிமகன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் வில்ஹெல்ம் (Stefan Wilhelm) கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார் மற்றும் விசாரணை தொடரும் வரை அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு வலியுறுத்தினார்.
தடயவியல் குழுவினர் சம்பவ இடத்தில் கடுமையாக சேதமடைந்த வாகனத்தை கவனமாக ஆய்வு செய்வது வருகின்றனர்.
மான்ஹெய்ம் காவல்துறை இரண்டாவது மரணத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் மேலும் இந்த தாக்குதலுக்கான நோக்கத்தை அதிகாரிகள் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |