இஸ்ரேலுக்கு ஜேர்மனி ஆயுதங்கள் வழங்கலாம்: சர்வதேச நீதிமன்றம் அதிரடி
ஜேர்மனி இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் முதலான உதவிகள் வழங்குவதை எதிர்த்து, நிகராகுவா என்னும் மத்திய அமெரிக்க நாடு, ஐ.நா சபையின் ஒரு அமைப்பான சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.
சர்வதேச நீதிமன்றம் அதிரடி
ஜேர்மனி, இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் முதலான உதவிகள் வழங்குவது, 1948ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கையை மீறும் செயலாகும் என நிகராகுவா குற்றம் சாட்டியிருந்தது.
Image: Thilo Schmuelgen/REUTERS
நேற்று இந்த வழக்கில் முதற்கட்ட தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கில், இஸ்ரேலுக்கு ஜேர்மனி ஆயுதங்கள் வழங்கலாம் என சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இஸ்ரேலுக்கு ஜேர்மனி வழங்கும் உதவிகளை நிறுத்தவோ அல்லது கட்டுப்படுத்தவோ, எந்த அவசர கால கட்டுப்பாடுகளையும் விதிக்கப்போவதில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.
தீர்ப்புக்கு வரவேற்பு
இந்த தீர்ப்பை ஜேர்மனி வரவேற்றுள்ளது. இது தொடர்பாக ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம் சமூக ஊடகமான எக்ஸில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், யாரும் சட்டத்துக்கு மேலானவர்கள் அல்ல என்றும், தற்போது வழக்கில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு அதையே சுட்டிக்காட்டுவதாகவும், மத்திய கிழக்கில் நிலவும் போரில் ஜேர்மனிக்கு எந்த பங்கும் இல்லை என்றும், சொல்லப்போனால் பிரச்சினையைத் தீர்க்க தாங்கள் இராப்பகலாக முயற்சி செய்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Deutschland ist keine Konfliktpartei in Nahost - im Gegenteil: Wir setzen uns Tag & Nacht für eine #Zweistaatenlösung ein. Wir sind größter Geber von humanitärer Hilfe für die Palästinenser. Wir arbeiten unerlässlich, dass die Hilfe die Menschen in #Gaza erreicht. 2/3
— Auswärtiges Amt (@AuswaertigesAmt) April 30, 2024
என்றாலும், அக்டோபர் 7ஆம் திகதி நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கெதிராக இஸ்ரேல் தக்க நடவடிக்கை எடுத்தாகவேண்டும் என்று கூறியுள்ளதுடன், ஹமாஸ் ஆயுதக்குழுவால் பிடித்துச் செல்லப்பட்ட சுமார் 100 பேர் ஆறு மாதங்களுக்கும் மேலாக ஹமாஸிடம் பிணைக்கைதிகளாக உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம்.
வீடியோவை காண
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |