புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தும் திட்டம்: ஜேர்மனியுடன் கைகோர்க்கும் நாடுகள்
புலம்பெயர்தலுக்கு எதிராக நடவடிக்கைகளை கடுமையாக்கிவரும் ஜேர்மனி, புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தும் திட்டம் தொடர்பில் வேறு சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் கைகோர்த்துள்ளது.
ஜேர்மனியுடன் கைகோர்க்கும் நாடுகள்
சமீபத்தில், சைப்ரஸ் நாட்டில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய உள்துறை அமைச்சர்கள் கூட்டம் ஒன்றில் பங்கேற்றார் ஜேர்மன் உள்துறை அமைச்சரான அலெக்சாண்டர் (Alexander Dobrindt).

கூட்டத்துக்குப் பின் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர், ஜேர்மனியும் வேறு சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இணைந்து, புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்பும் மையங்கள் அமைத்தல் மற்றும் புலம்பெயர்ந்தோரை மூன்றாம் நாடுகளுக்கு நாடுகடத்துதல் ஆகிய திட்டங்களை நிறைவேற்ற இருப்பதாக தெரிவித்தார்.
அடுத்த சில வாரங்களில் இந்த விடயங்கள் தொடர்பில் முக்கிய நடவடிக்கைகள் துவங்க இருப்பதாகவும் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.
இப்போதைக்கு, ஆஸ்திரியா, டென்மார்க், நெதர்லாந்து மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகள் ஜேர்மனியுடன் கைகோர்த்துள்ளதாகவும், பின்னர் மேலும் பல நாடுகள் இந்தக் குழுவில் இணையக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 2023ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, ஜேர்மனி நாடுகடத்திய புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 2025இல் 45 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்கின்றன ஜேர்மன் ஊடகங்கள்.
ஜேர்மன் ஃபெடரல் உள்துறை அமைச்சக தரவுகளின்படி 2025இல் நாடுகடத்தப்பட்ட புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 23,000 ஆகும்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |