ஜேர்மனியில் மீண்டும் ஒரு புகலிடக்கோரிக்கையாளர் நடத்தியுள்ள தாக்குதல்: அரசியலாகும் விவகாரம்
ஜேர்மனியில் ஏற்கனவே புலம்பெயர்தலுக்கு எதிராக சில கட்சிகள் வரிந்துகட்டிக்கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், மீண்டும் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ள விவகாரம் அரசியலாகியுள்ளது.
புகலிடக்கோரிக்கையாளர் நடத்திய தாக்குதல்?
ஜேர்மனியின் பவேரியா மாகாண தலைநகரான மியூனிக் நகரில், வியாழக்கிழமையன்று, தொழிற்சங்க பேரணி ஒன்று நடந்துகொண்டிருந்த நிலையில், ஒருவர் வேண்டுமென்றே அந்தக் கூட்டத்தின் மீது வேகமாகக் காரைக் கொண்டு மோதியுள்ளார்.
Verdi Demo in München.
— AlternativeMitte (@ZamirSh11842484) February 13, 2025
Auto rast in die Demo. pic.twitter.com/cLBHaDebfi
இந்த பயங்கர சம்பவத்தில் குழந்தைகள் உட்பட 30 பேர் காயமடைந்தார்கள். அதில் ஒரு குழந்தை உட்பட இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலை நடத்தியவர், 24 வயதுடைய ஆப்கன் நாட்டவரான புகலிடக்கோரிக்கையாளர் என்றும், அவர் நாடுகடத்தப்படுவதற்காக காத்திருந்தவர் என்றும் முதலில் தகவல்கள் வெளியாகின.
அரசியலாகும் விவகாரம்
அதைத் தொடர்ந்து, புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி சார்பில் சேன்ஸலர் பதவிக்கு போட்டியிடுபவரான ஆலிஸ் வீடல் (Alice Weidel), தங்கள் கட்சி ஜேர்மனியில் ஆட்சியில் இருந்திருக்குமானால், தாக்குதல் நடத்திய ஆப்கன் நாட்டவர் ஜேர்மனிக்குள் நுழைந்திருக்கவேமாட்டார் என்று கூறியுள்ளார்.
எப்போதும் இப்படித்தான் நடக்கிறது என்று கூறியுள்ள ஆலிஸ், ஒரு புகலிடக்கோரிக்கையாளர் ஜேர்மனிக்குள் வருகிறார், அவரது புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது, ஆனால் அவர் நாடுகடத்தப்படமாட்டார், இதுவே வழக்கமாகிவிட்டது.
இதுவே AfD கட்சி ஜேர்மனியில் ஆட்சியில் இருந்திருக்குமானால், அந்த ஆப்கன் நாட்டவர் ஜேர்மனியில் இருந்திருக்கவேமாட்டார் என்று கூறியுள்ளார் ஆலிஸ்.
விடயம் என்னவென்றால், உண்மையில் அந்த ஆப்கன் நாட்டவர் முறைப்படி ஜேர்மனியில் வாழ குடியிருப்பு அனுமதி பெற்றுள்ளார், பணி அனுமதியும் வைத்துள்ளார்.
இந்நிலையில், அந்த ஆப்கன் நாட்டவர் மீது ஏற்கனவே எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை, அத்துடன் நாடுகடத்தப்படுவதற்காக அவருக்கு நோட்டீஸ் அளிக்கப்படவும் இல்லை என பவேரியாவின் உள்துறை அமைச்சரான Joachim Herrmann தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |