ஜேர்மனிக்கு இந்தியர்கள் வேண்டும்: தொழிலாளர் துறை அமைச்சர் அழைப்பு
இந்திய திறன்மிகுப் பணியாளர்கள் ஜேர்மனிக்கு வேண்டும் என்று கூறியுள்ளார் ஜேர்மன் தொழிலாளர் துறை அமைச்சர்.
ஜேர்மனிக்கு நீங்கள் வேண்டும்
ஜேர்மனியில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொள்வதற்காக இந்தியாவுடன் தொழில் யுக்தி ஒன்றை உருவாக்குகிறது அந்நாடு.
சமீபத்தில் தலைநகர் பெர்லினில் இந்திய மாணவர்களை சந்தித்தார் ஜேர்மன் தொழிலாளர் துறை அமைச்சரான Hubertus Heil.
அப்போது அவர், புலம்பெயர்ந்தோர் ஜேர்மனிக்கு எவ்வளவு அவசியம் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியதுடன், மாணவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்ட விடயங்களை கவனமாக கேட்டு அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும் தெரிவித்தார்.
விசா நடைமுறைகளை எளிதாக்கி, திறன்மிகுப் பணியாளர்களான வெளிநாட்டவர்களை பெரிய அளவில் ஈர்ப்பதற்காக ஜேர்மனி முயற்சி மேற்கொண்டுவரும் நிலையில், இந்தியா போன்ற நாடுகளிலுள்ள திறன்மிகுப் பணியாளர்கள் மீது ஜேர்மனி கவனம் செலுத்தத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |