ஜேர்மனியில் அதிகரிக்கும் சிறுவர் ஆபாசப்பட விநியோகம், சைபர் கிரைம்.. அதிர்ச்சித் தகவல்
ஜேர்மனியின் ஒட்டுமொத்த குற்ற விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது, ஆனால் சிறுவர் ஆபாசப் படங்கள் மற்றும் சைபர் கிரைம் விநியோகம் அதிகரித்துள்ளது என்று ஜேர்மனியின் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜேர்மனியில் சிறுவர் ஆபாசப் படங்கள் விநியோகம் கடந்த ஆண்டு இரட்டிப்பாகியுள்ளது, 2021-ஆம் ஆண்டில் முந்தைய ஆண்டை (2020) விட 108.8% அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் நாட்டின் வருடாந்திர குற்ற புள்ளிவிவர அறிக்கையின் செய்தி மாநாட்டில் தெரிவித்தனர்.
இது குறித்து, ஜேர்மன் உள்துறை அமைச்சர் நான்சி ஃபேசர் பேர்லினில் செய்தியாளர்களிடம் பேசியபோது, பயங்கரமான அளவிற்கு அதிகரித்துள்ள குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க தனக்கு தெளிவான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
"குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் இணையம் வழியாக கொடூரமான துஷ்பிரயோக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பரப்புவதற்கு எதிராக போராடுவது முதன்மையான கடமையாக இருக்கும்" என்று அவர் மேலும் கூறினார்.
கூட்டாட்சி குற்றவியல் காவல்துறை அலுவலகத்தை மேலும் வலுப்படுத்துவதாகவும், அந்த குற்றங்களை விசாரிப்பதில் அழுத்தத்தை அதிகரிப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
மேலும், குழந்தை ஆபாசப் படங்கள் மற்றும் அதன் விநியோகத்தை எதிர்த்துப் போராடுவதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துதல் உட்பட தரவுகளின் பகுப்பாய்வை மேம்படுத்துவதில் அரசாங்கம் செயல்பட்டு வருவதாக ஃபைசர் கூறினார்.
சிறுவர் ஆபாச விநியோகம் குறித்த அறிக்கைகள் அதிகரிப்பதற்கான காரணங்களில், ஜேர்மனியில் நடக்கும் குற்றங்கள் குறித்து அதிகாரிகளுக்குத் தெரிவிக்கும் அமெரிக்காவின் National Center of Missing and Exploited Children அமைப்புடனான ஜேர்மனியின் ஒத்துழைப்பின்மையும் ஒன்று என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டுகளைப் போலவே, சைபர் கிரைம்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2021-ல் 146,363 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன, இது முந்தைய ஆண்டை (2020) விட 12.1% அதிகரித்துள்ளது.
"சைபர் கிரைம் வழக்குகளின் எண்ணிக்கை 2015 முதல் இரு மடங்காக அதிகரித்துள்ளது" என்று நாட்டின் மத்திய குற்றவியல் காவல் அலுவலகத்தின் தலைவர் ஹோல்கர் முயெஞ்ச் கூறியுள்ளார்.
ஒட்டுமொத்தமாக, ஜேர்மனியில் 2017-ல் இருந்து குற்றங்கள் குறைந்துள்ளன. 2021-ல் 5,047,860 கிரிமினல் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது முந்தைய ஆண்டை விட 4.9% குறைந்துள்ளது.
மொத்தம் 1,892,003 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டனர், அவர்களில் முக்கால்வாசி பேர் ஆண்கள்.
வன்முறை குற்றங்களில், வழக்குகளின் எண்ணிக்கை 6.8% குறைந்து 164,646 ஆக உள்ளது என்று அரைக்கை தெரிவிக்கிறது.