ஜேர்மனியில் முதல் முறையாக 250,000 கடந்த தினசரி கோவிட்-19 பாதிப்பு!
ஜேர்மனியில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளதாக ராபர்ட் கோச் நிறுவனம் (RKI) இன்று தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், 262,752 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வாரத்திற்கு முன்பு அந்த எண்ணிக்கை 210,673-ஆக இருந்தது.
பல ஜேர்மன் சோதனை வசதிகள் வரையறுக்கப்பட்ட திறனுடன் இயங்குவதால் வழக்குகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
நேற்று (மார்ச் 9) 259 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததாக ஜேர்மனியின் தொற்று நோய்களுக்கான பொது சுகாதார நிறுவனமான RKI தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த ஏழு நாட்களில் 100,000 பேரில் 1,388.5 பேர் என்ற எண்ணிக்கையில் தொற்று அதிகரித்துள்ளது என்று RKI தெரிவித்துள்ளது.
தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, ஜேர்மனியில் 16.5 மில்லியன் மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 125,023 பேர் வைரஸால் இறந்துள்ளனர்.