நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டுவரும் ஜேர்மானியர்கள்
ஜேர்மானியர்களில் ஐந்தில் ஒருவர் நாட்டைவிட்டு வெளியேறத் திட்டமிட்டுவருவதாக சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது.
நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டம்
ஜேர்மன் புலம்பெயர்தல் மற்றும் ஒருங்கிணைப்பு ஆராய்ச்சி மையத்தின் சமீபத்திய ஆய்வில், சுமார் 20 சதவிகிதம் ஜேர்மானியர்கள் நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டது தெரியவந்துள்ளது.
ஒரு சிறந்த வாழ்க்கையைத் தேடிக்கொள்வதும், புலம்பெயர்ந்த பின்னணியைக் கொண்டவர்கள் என்றால், பாகுபாட்டை எதிர்கொள்வதுமே அதற்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்பட்டுள்ளன.
ஜேர்மானியர்களில் மொத்தம் 21 சதவிகிதம் பேர், ஜேர்மனியை விட்டு வெளியேறுவது குறித்து பரிசீலிப்பதாகக் கூறியுள்ளனர்.
விடயம் என்னவென்றால், புலம்பெயர் பின்னணி இல்லாத ஜேர்மானியர்களிலேயே 17 சதவிகிதம் பேர் ஜேர்மனியை விட்டு வெளியேறுவது குறித்து பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளார்கள்.
Moritz Frankenberg/dpa/picture alliance
முதல் தலைமுறை புலம்பெயர்ந்தோரில் 34 சதவிகிதம் பேர் ஜேர்மனியை விட்டு வெளியேறுவது குறித்து பரிசீலிப்பதாகக் கூறியுள்ளனர்.
இரண்டாம் தலைமுறை புலம்பெயர்ந்தோரில் 37 சதவிகிதம் பேர் ஜேர்மனியை விட்டு வெளியேறுவது குறித்து பரிசீலிப்பதாகக் கூறியுள்ளனர்.
துருக்கி, மத்திய கிழக்கு அல்லது வட ஆபிரிக்காவுடன் தொடர்புடைய பின்னணியைக் கொண்டவர்களில் அதிகபட்சமாக 39 சதவிகிதம் பேர் ஜேர்மனியை விட்டு வெளியேறுவது குறித்து பரிசீலிப்பதாகக் கூறியுள்ளனர்.
சோவியத்துக்குப் பிந்தைய கால கட்ட நாடுகளைச் சேர்ந்த பின்னணியைக் கொண்டவர்களில் 31 சதவிகிதம் பேர் ஜேர்மனியை விட்டு வெளியேறுவது குறித்து பரிசீலிப்பதாகக் கூறியுள்ளனர்.
மேலும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளைச் சேர்ந்தவர்களில், சுமார் 28 சதவிகிதம் பேர் ஜேர்மனியிலிருந்து வெளியேறுவது பற்றி திட்டமிட்டதாக தெரிவித்துள்ளனர்.
என்றாலும், 2024ஆம் ஆண்டின் கோடை காலத்துக்கும் 2025ஆம் ஆண்டின் கோடை காலத்துக்கும் இடையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 2,933 பேரில், 2% பேர் மட்டுமே ஜேர்மனியை விட்டு வெளியேறுவது குறித்து திட்டமாக முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
ஜேர்மன் ஃபெடரல் அலுவலக புள்ளிவிவரங்களின்படி, 2024ஆம் ஆண்டில் 1.2 மில்லியன் மக்கள் ஜேர்மனியை விட்டு வெளியேயுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |