இனி எங்களை பிளாக்மெயில் செய்ய முடியாது! ரஷ்யாவுக்கு செய்தி அனுப்பிய ஜேர்மனி
ரஷ்ய எரிவாயு விநியோகத்திற்கு ஜேர்மனி இனி ரூபிள்களில் பணம் செலுத்தாது என்று ஜேர்மன் நிதி அமைச்சர் கிறிஸ்டியன் லிண்ட்னர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது படையெடுத்த ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகள் விதித்தன.
இதன் வினைவாக ரஷ்யாவின் பங்குச்சந்தை மற்றும் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்தது.
பெருளாதார சரிவை சற்று சமாளிக்க, இனி ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் வாங்கும் நாடுகள் அதற்கு ரூபிளில் பணம் செலுத்த வேண்டும் என ரஷ்யா அறிவித்தது.
இதற்கு பல நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், இனி ரஷ்ய எரிவாயு விநியோகத்திற்கு ஜேர்மனி ரூபிள்களில் பணம் செலுத்தாது என்று நிதி அமைச்சர் கிறிஸ்டியன் லிண்ட்னர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இனி எங்களை அச்சுறுத்த முடியாது என மிக தெளிவாக புடினிடம் தெரிவித்துக்கொள்கிறேன். வருங்காலங்களில் ரூபிளில் ரஷ்ய எரிவாயுவிற்கு நாங்கள் பயணம் செலுத்த மாட்டோம்.
முடிந்தவரை விரைவாக ரஷ்யாவை சார்ந்தில்லாமல் சுதந்திரமாக எரிவாயு பெற எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம் என கிறிஸ்டியன் லிண்ட்னர் தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022