கல்விக் கட்டணம் இல்லாமல் பயோமெடிக்கல் MSc படிப்பை வழங்கும் ஜேர்மனி - சிறந்த 5 பல்கலைக்கழகங்கள் இதோ
ஜேர்மனி, வெளிநாட்டு மாணவர்களுக்கு, கல்விக் கட்டணம் இல்லாமல் பயோமெடிக்கல் MSc படிப்பை தொடர்ந்து வழங்கிவருகிறது.
மருத்துவம் மற்றும் பயோமெடிக்கல் அறிவியலில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு, பல ஜேர்மானிய பல்கலைக்கழகங்கள் இப்போது ஆங்கிலத்தில் கற்பிக்கப்படும் MSc (Master Of Science) முதுகலை பட்டப்படிப்பை, கல்விக் கட்டணம் இல்லாமல் மற்றும் Flexible Intake விருப்பங்களுடன் வழங்குகின்றன.
ஜேர்மனியின் பொதுப் பல்கலைக்கழகங்கள் BioMedical Science உட்பட பல துறைகளில் கல்விக்கட்டணம் இல்லாமல் MSc course-ஐ வழங்குகின்றன.
இந்த படிப்புகள் பெரும்பாலும் செப்டம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தொடங்கி, குளிர்கால மற்றும் கோடைகால செமஸ்டர்களில் கிடைக்கின்றன.
மருத்துவம் மற்றும் பயோமெடிக்கல் அறிவியல் துறைகளில் Tuition-Fee இல்லாத MSc படிப்பை வழங்கும் சிறந்த 5 பல்கலைக்கழகங்கள் இதோ:
- Hochschule Bonn-Rhein-Sieg பல்கலைக்கழகம், Rheinbach
- Otto von Guericke பல்கலைக்கழகம், Magdeburg
- Hamburg University of Aplied Science, Hamburg
- RWTH Aachen பல்கலைக்கழகம், Aachen
- Technische Hochschule Lubeck பல்கலைக்கழகம்
இக்கல்வி திட்டங்களை, ஜேர்மனியின் தேசிய நிதி நிறுவனமான DAAD (DeutscherAkademischer Austrauschdienst) ஆதரிக்கின்றது. இது வெளிநாட்டு மானவர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு உதவித்தொகை மற்றும் நிதி ஆதரவை வஸ்க்கிங்கும் ஜேர்மனியின் தேசிய நிதி நிறுவனமாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Germany Tuition Free MSc, Biomedical Science course in Germany, Study in Germany, Germany Free MSc Course, MSc in Germany, Higher Education in Germany