எதிர்ப்பையும் மீறி வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கும் விடயத்தில் ஜேர்மனி அரசு எடுக்கவிருக்கும் நல்ல முடிவு
எதிர்ப்பையும் மீறி வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கும் விடயத்தில் ஜேர்மனி அரசு எடுக்கவிருக்கும் நல்ல முடிவு
வெளிநாட்டவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க முடிவு செய்துள்ளதாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜேர்மன் அரசு கடந்த மாத துவக்கத்தில் அறிவித்திருந்தது.
ஜேர்மனியில் நீண்டகாலமாக இரட்டைக் குடியுரிமைக்காக காத்திருந்த வெளிநாட்டவர்களுக்கு அந்த செய்தி பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து ஏற்பட்ட ஏமாற்றம்
ஆனால், இரட்டைக் குடியுரிமை வழங்கும் அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு உருவானது. CDU கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Ariturel Hack, இரட்டைக் குடியுரிமை வழங்குவதாக வெளியான அரசின் திட்டம் பொய்யானது, ஆபத்தானது அதை நிறுத்தவேண்டும் என்று கூறியிருந்தார்.
இப்படி தொடர்ந்து எதிர்மறை செய்திகள் வெளியாக, மக்கள் ஏமாற்றத்திற்குள்ளானார்கள்.
Photo: Photothek
உறுதி செய்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்
இந்நிலையில், குடியுரிமை மறுசீரமைப்பு சட்டம் தொடர்பான பணிகளை கவனித்து வரும் கூட்டணி அரசின் ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினரான Hakan Demir, கடும் எதிர்ப்பையும் மீறி, 2023ஆம் ஆண்டின் முதல் பாதியில் குடியுரிமை மறுசீரமைப்பு சட்டம் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்துள்ளார்.
அந்த சட்டத்தை நிறைவேற்ற கூட்டணி அரசு உறுதிபூண்டுள்ளது என்று கூறும் Hakan Demir, குடியிருப்பு அனுமதி மற்றும் ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோருக்கான உரிமைகள் தொடர்பிலான இரண்டு சட்டங்கள் முதல் கட்டமாக இப்போது நிறைவேற்றப்படும் என்றும், அவை நிறைவேறியபின், குடியுரிமை மறுசீரமைப்பு சட்டம் நிறைவேற்றப்படும் என்றும் கூறியுள்ளார்.