ஜேர்மனியில் வேலை வாய்ப்புகள் - இந்தியர்களுக்கு புதிய வாய்ப்பு
ஜேர்மனியின் வேலை சந்தை தற்போது 7.7 லட்சம் காலிப்பணியிடங்களுடன் ஐரோப்பாவின் மிக வலுவான தொழில் சூழலாக உள்ளது.
ஜேர்மனியில் 2024-இல் வேலை இழப்பு விகிதம் 4.2 சதவீதம் மட்டுமே பதிவாகியுள்ளது. அதேபோல் 2025-இல் GDP வளர்ச்சி 1.5 சதவீதம் என கணிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு திறமையாளர்களுக்கான தேவை
ஜேர்மனி, ஆண்டுதோறும் 90,000 திறமையான வெளிநாட்டு பணியாளர்களை வரவேற்க திட்டமிட்டுள்ளது.
Skilled Immigration Act (2020) மூலம், ஐரோப்பிய ஒன்றியம் (EU) அல்லாத நாடுகளிலிருந்து வரும் தொழில்முனைவோருக்கு எளிதான அனுமதி நடைமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
வயதான மக்கள் தொகை மற்றும் குறைந்த பிறப்பு விகிதம் காரணமாக, உள்நாட்டு பணியாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

அதிக தேவை உள்ள துறைகள்
பொறியியல் மற்றும் உற்பத்தி துறை: BMW போன்ற நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான பணியிடங்களை அறிவித்துள்ளன. ஆண்டு சம்பளம் 40,000-90,000 யூரோ.
சுகாதாரத் துறை: 31,000 காலிப்பணியிடங்கள். 2030-க்குள் 5 லட்சம் செவிலியர்கள் தேவைப்படும். மாத சம்பளம் 2,500-3,500 யூரோ.
IT மற்றும் மென்பொருள் துறை: 2025-இல் 1.09 லட்சம் காலிப்பணியிடங்கள். Software developers, Cybersecurity, Data Science போன்ற துறைகள். ஆண்டு சம்பளம் சுமார் 60,000 யூரோ.
நிதித் துறை: Frankfurt உலகின் Top 10 financial hubs-இல் ஒன்று. Risk management, compliance, fintech துறைகளில் அதிக வாய்ப்பு.
விருந்தோம்பல்: 2024-இல் 496.1 மில்லியன் Night Stays பதிவாகியுள்ளன. Hotel managers-க்கு 15 சதவீதம் அதிக தேவை உள்ளது.
ஜேர்மனியில் வேலை செய்ய, ஜேர்மன் மொழி திறன் (A2-B1) பெரும்பாலான பணியிடங்களுக்கு அவசியம்.
கலாச்சார ஒத்துழைப்பு, நேர்த்தி, நம்பகத்தன்மை ஆகியவை முக்கியமாக மதிக்கப்படுகின்றன.
ஜேர்மனியின் வேலை சந்தை, இந்தியர்களுக்கு நீண்டகால தொழில் வளர்ச்சி மற்றும் குடிவரவு வாய்ப்புகளை வழங்குகிறது. சரியான மொழித் திறன், தொழில்நுட்ப சான்றிதழ்கள், கலாச்சார புரிதல் ஆகியவற்றுடன், ஜேர்மனியில் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Germany job openings 2025 Indian professionals, Skilled Immigration Act Germany work visa update, Germany 770,000 vacancies engineering healthcare IT, Berlin Munich Frankfurt top job cities Germany, Germany hiring foreign workers aging population gap, Indian students and professionals jobs in Germany, Germany A2 B1 German language requirement jobs, BMW engineering R&D positions Germany salary 40k-90k Euro, Germany healthcare nursing shortage 500k by 2030, IT software developer cybersecurity data scientist jobs Germany