"மிகப்பெரிய பிரச்சினை ஜேர்மனியை சூழ்ந்துள்ளது" சுகாதார அமைச்சர் எச்சரிக்கை!
ஜேர்மனியின் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான், தனது நாடு தடுப்பூசி போடப்படாதவர்களின் தொற்றுநோய்க்கு உள்ளாகி வருவதாக எச்சரித்துள்ளார்.
இது ஜேர்மனியை சூழ்ந்துள்ள மிகப்பெரிய பிரச்சினை என கூறிய அவர், இதன் காரணமாக கோவிட் தொற்று எண்ணிக்கை மீண்டும் எழுவதைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து ஜென்ஸ் ஸ்பான் (Jens Spahn) மேலும் கூறுகையில் "ஜெர்மனியில் சில பிராந்தியங்களில் தீவிர சிகிச்சை படுக்கைகள் மீண்டும் நிரம்பிவருகிறது" என்று கவலை தெரிவித்துள்ளார்.
ஏறக்குறைய 83 மில்லியன் மக்களைக் கொண்ட ஐரோப்பாவின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான ஜேர்மனி, சமீபத்திய வாரங்களில் நான்காவது அலை கோவிட் -19 பாதிப்புகளுடன் போராடி வருகிறது.
கடந்த மே மாதத்திலிருந்து காணப்படாத ஏழு நாள் பாதிப்பு விகிதம் தற்போது அதிகபட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 20,398 பாதிப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்று ராபர்ட் கோச் சுகாதார நிறுவனம் (RKI) புதன்கிழமை தெரிவித்துள்ளது. மேலும், கடந்த ஐ 4 மணிநேரத்தில் 194 பேர் இறந்துள்ளனர்.
ஜேர்மன் மக்கள்தொகையில் 66 சதவீதத்திற்கும் அதிகமானோர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளனர், ஆனால் ஸ்பான் இது போதாது என விரக்தியை வெளிப்படுத்தினார்.
எனவே, கோவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் தற்போதைய வேகம் போதாது, பூஸ்டர் தடுப்பூசி விநியோகத்திலும் ஒரு பெரிய உந்துதலை கட்டவேண்டும் என ஸ்பான் கூறியுள்ளார்.