கட்டாய தடுப்பூசி மசோதா: ஜேர்மன் நாடாளுமன்றம் நிராகரிப்பு
60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான பொது கோவிட் தடுப்பூசி ஆணைக்கான மசோதாவை ஜேர்மன் நாடாளுமன்றம் நிராகரித்துள்ளது.
ஜேர்மன் நாடாளுமன்றத்தில் இன்று காலை நடைபெற்ற சிறப்பு அமர்வில் இந்த மசோதாவுக்கு எதிராக 378 எம்பிக்களும், ஆதரவாக 296 பேரும் வாக்களித்தனர்.
SPD, Greens மற்றும் FDP ஆகிய ஆளும் கூட்டணி கட்சிகளில் தடுப்பூசிக்கு ஆதரவான எம்.பி.க்களின் இரு குழுக்களின் கூட்டு முயற்சியாக இந்த மசோதா முன் மொழியப்பட்டது.
அதன்படி, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவ விலக்கு இல்லாதபட்சத்தில், அக்டோபர் 1, 2022-க்குள் கோவிட்-19 க்கு எதிராக மூன்று முறை தடுப்பூசி போட்டதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
Photo: picture alliance/dpa | Kay Nietfeld
மேலும், வரைவுச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்களின்படி, 18 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள், கோவிட் ஜாப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளைப் பற்றி விவாதிக்க தங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
இன்று காலை பன்டேஸ்டாக்கில் நடந்த விவாதத்தின் போது இந்தத் திட்டங்கள் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டன. AfD, Left Party மற்றும் CDU/CSU ஆகிய கட்சிகளின் அரசியல்வாதிகள் மசோதாவை கடுமையாக விமர்சித்தனர்.