ஜேர்மன் நாடாளுமன்றத்திலேயே ஆட்குறைப்பு... சட்டம் தயார்
ஜேர்மன் நாடாளுமன்றத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வகை செய்யும் மசோதா ஒன்றை நிறைவேற்றியுள்ளது அந்நாடு.
பெரிய நாடாளுமன்றம்
ஜேர்மன் நாடாளுமன்றத்தின் மேலவையில் 736 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். பெரிய நாடாளுமன்றமாக இருக்கும் ஜேர்மன் நாடாளுமன்றத்தின் மேலவையின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 630ஆகக் குறைக்க ஆளுங்கட்சிகள் வலியுறுத்திவந்தன.
எதிர்க்கட்சிகளோ எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
ஆக, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
மசோதாவுக்கு ஆதரவாக 400 நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிராக 261 பேரும் வாக்களித்துள்ளார்கள், 23 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.